top of page
Aram Landscape poster.png

In this exploration we will cover

இந்தப் பட்டறையைப் பற்றி 

அறம் என்பது நாம் தமிழில் பயில ஆரம்பிக்கிற பொழுது அறிமுகமாகிற சொல். திருக்குறளின் அறத்துப்பால், நாலடியார், ஆத்திச்சூடி என்றுதான் இலக்கிய வட்டத்துக்குள் அடி எடுத்து வைக்கிறோம். அப்படிப் படிப்பதாலா, இல்லை பெற்றோரும் ஊரும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதாலா, நம்முள்ளே நமக்கேயான ஒரு ஒழுக்க முறை நிலைபெற்று விடுகிறது. வாழ்க்கை நம்மை ஒரு ஓரத்துக்குத் தள்ளும்போது தான் அறத்துக்கு நமக்குமான பிடிப்பு எத்தனை ஆழமானது என்பது புரிகிறது.

அறம் மேலெழுந்து நம் அடிமனதை நோண்டுகிற பொழுது எல்லா சந்தர்ப்பங்களிலும் சமாதானம் சொல்லிச் சமாளிக்க முடிவதில்லை. அப்படி அறம் வெடித்துத் தளும்புகிற தருணங்களின் சிறுகதைத் தொகுப்பு ஜெயமோகனின் "அறம்".  

இந்தக் கதைகளின் மூலம், நம்மை உயிர்ப்பிக்கிற நமக்கான அறத்தின் அடையாளத்தைக் கண்டடைய முடியுமா என்கிற தேடலே இந்தப் பயணம்.

"என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி   என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை", என்று இந்தக் கதைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் ஜெ. மோ. அந்த மன எழுச்சி ஒவ்வொரு சிறுகதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது.

 

வாரம் ஒன்றாக  ஊறப் போட்டு இந்த நூலை வாசிப்பது ஒரு தவம். அடுத்த எட்டு வாரப் பயணத்தில், அந்தத் தவத்தின் ஊடே நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு கதையும் உங்கள் அறத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதை ஆராய்வோம்.

Aram and Mandram jointly present this self-exploration on the concept of "Aram" 

Aram hopes to be both a center for embodied research and the study of Evolutionary Leadership and a supportive community of friends and fellow seekers aspiring for a more conscious human presence on the planet. 

Stewarded by Naveen, Aram is inspired by the integral and evolutionary teachings of Sri Aurobindo and The Mother, and holds his call as its vision statement. However, those interested in being a part of the community are not required to have a prior background in the teachings or mandatorily subscribe to them. The objective is to keep it an open space for enquiry and exploration and stay away from proselytization of any kind.

Aram is a formal entity registered within the legal framework of Auroville.

Mandram is an initiative to bring back regional languages into modern discourse. Venkataraman Ramachandran and Maragathavalli Inbamuthiah started Mandram in 2017 with the vision of making it normal to speak Technology and Sciences in native languages.
Mandram is a forum to foster creative imaginations in indic languages. It is an experiment to explore deep, beautiful thoughts in native languages; without polarizing politics; without seducing advertisements; without amusements.

தொகுப்பாளர்கள்

Meet your facilitators

jeyamohan-aram.jpg
இந்த நிகழ்ச்சிக்கான பதிவுகள் நிறைவு பெற்றன.

மேலும் விவரங்கள் அறிய எங்களுக்கு எழுதுங்கள்.

mandramorg@gmail.com
bottom of page